கனடாவில் மற்றுமொரு காலிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை!

#Canada #Lanka4 #GunShoot #லங்கா4 #Canada Tamil News #Tamil News
Mugunthan Mugunthan
9 months ago
கனடாவில் மற்றுமொரு காலிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை!

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 சுட்டுக்கொல்லப்பட்ட நபர் 2017ல் இந்தியாவில் இருந்து தப்பி சென்று கனடாவில் வாழ்ந்துவந்தவர் எனவும் கூறப்படுகின்றது. வின்னிபெக் நகரில் சுட்டுக்கொலை அதேவேளை இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‛காலிஸ்தான் டைகர் போர்ஸ்' என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவரும், இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு, 10 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டவருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (45) கடந்த ஜூன் மாதம் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 இந்த விவகாரத்தின் பின்னனியில் இந்தியா செயல்படுவதாக கனடா குற்றம் சுமத்திய நிலையில் இந்தியா - கனடா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

 இந்த நிலையில் கனடாவின் வின்னிபெக் நகரில் நடைபெற்ற காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் இடையில் இன்று மோதல் வெடித்துள்ளது. அப்போது பயங்கரவாதி சுக்தூல் சிங் என்பவன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. 

கடந்த 2017ல் இந்தியாவில் இருந்து கனடாவிற்கு தப்பி சென்று தலைமறைவாக இருந்த சுக்தூல் சிங்கை இந்தியாவின் என்.ஐ.ஏ அமைப்பு தேடி வந்தது. இந்த நிலையில் இன்று குறித்த நபர் சுட்டுக்கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ள நிலையில் கனடா இந்தியா இடையிலான மோதல் போக்கும் மேலும் நீடிக்கப்படலாம் என அஞ்சப்படுகின்றது.