இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய புலம் பெயர் தமிழர்கள்!

#SriLanka #Protest #Lanka4 #London #Tamilnews #sri lanka tamil news #England
Dhushanthini K
9 months ago
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய புலம் பெயர் தமிழர்கள்!

பிரித்தானியாவில் வெளி விவகார அமைச்சுச் செயலகத்திற்கு முன்பாகச் சிங்கள இனவழிப்பு அரசின் கொடும் செயலைக் கண்டித்தும் அதனைப் பிரித்தானிய அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கிலும் பிரித்தானியத் தமிழர்களால் இன்று (21.09) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

மிகக் குறுகிய கால அழைப்பானது தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் விடுக்கப்பட்டு இருந்தது. 

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். 

images/content-image/1695294551.jpg

இந்த போராட்டமானது தமிழ்த் தேசிய உணர்வை எந்த சக்திகளாலும் அடக்கமுடியாது என்பதை மீண்டும் எடுத்தியம்பியதாக அரசியல் நோக்குனர்கள் தெரிவித்துள்ளனர். 

இன்றைய போராட்டமானது பிரித்தானிய அரசிற்கும் உலகிற்கும் தமிழ் மக்களுக்கான அரசியற் தீர்வில், தமிழ் மக்கள் என்றும் உறுதியாகப் பயணிப்பார்கள் என்ற செய்தியை அழுத்தமாகச் சொல்லியுள்ளது. 

images/content-image/1695294618.jpg

இன்றைய போராட்டத்தில் தமிழ் இளையோர் அமைப்பினர், மக்களவை அமைப்பினர் ஆகியோர் ஆங்கில உரைகளை வழங்கியிருந்தார்கள். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற முழக்கத்தோடு போராட்டம் நிறைவு பெற்றுள்ளது. 

images/content-image/1695294675.jpg

images/content-image/1695294724.jpg