கொவிட் காலத்திற்குப்பின் கனேடிய மக்களின் ஆயுட்காலம் குறைவடைந்துள்ளது
#Canada
#Age
#Elder
#Lanka4
#வயது
#லங்கா4
#முதியோர்
#Canada Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
2 years ago
கனடாவில் மக்களது ஆயுட்காலம் குறைவடைந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கனடாவின் புள்ளி விபரவியல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 1980 ஆம் ஆண்டு முதல் கனடிய மக்களின் ஆயுட்காலம் தொடர்ச்சியாக சாதகநிலை காணப்பட்டுள்ளது.
எனினும் கோவிட் பெருந்தொற்று பரவுகையின் பின்னர் இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டின் பின்னர் கனடிய மக்களின் ஆயுட்காலத்தில் சரிவு பதிவாகி உள்ளது.
ஆண்களின் ஆயுட்காலம் அதிக அளவில் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 79.3 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளதுடன் பெண்களின் ஆயுட்காலம் 84 வயதாக பதிவாகியுள்ளது.