மே 5-ம் தேதி நீட் தேர்வு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

#Tamil Nadu #Student #Tamil People #exam #doctor #Tamil Student #students #Tamilnews #School Student #College Student #Examination #student union
Mani
2 months ago
மே 5-ம் தேதி நீட் தேர்வு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

நாட்டில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. நடப்புண்டு நீட் நுழைவுத் தேர்வு மே 7 -ம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், அடுத்தாண்டு, அதாவது 2024-ம் ஆண்டு நீட் நுழைவுத் தேர்வு எப்போது நடைபெறும் எனக் கேள்வி எழுந்தது. இதற்கு விடையளிக்கும் வகையில், தேசிய தேர்வு முகமை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி 2024 ஆம் ஆண்டு நீட் தேர்வு மே 5 -ம் தேதி நடைபெறும் என்றும், இதற்கான முடிவுகள் ஜூன் 2 -வது வாரத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஜேஇஇ தேர்வு 2 கட்டமாக நடைபெறும் என்றும், இதில் முதல் கட்டத் தேர்வு 2024 -ம் ஆண்டு ஜனவரி 24 -ம் தேதி தொடங்கி பிப்ரவரி 1 -ம் தேதிக்குள் நடைபெறும் என்றும், 2 -ம் கட்ட தேர்வு ஏப்ரல் 1 -ம் தேதி தொடங்கி 15 -ம் தேதிக்குள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் இளங்கலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்காக பொது நுழைவுத் தேர்வு எனப்படும் க்யூட் (CUET) 2022-2023 -ம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

அதன்படி, என்.சி.இ.ஆர்.டி. 12-ம் வகுப்புப் பாடத்திட்டத்தின்படி நடைபெறும். இதில் இளநிலை படிப்புகளுக்கான தேர்வு மே 15 -ம் தேதி முதல் 31 -ம் தேதி வரை நடைபெறும்.

முதுநிலை படிப்புகளுக்கான தேர்வு மார்ச் 11 -ம் தேதி முதல் 28 -ம் தேதிக்குள் நடைபெறும் என்றும், யுஜிசி நெட் தேர்வு ஜூன் 10 -ம் தேதி முதல் 21 -ம் தேதிக்குள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு