கனடா அரசாங்கம் ஜி. எஸ். ரி. வரியை ரத்துச் செய்யவுள்ளது

#Canada #government #Lanka4 #லங்கா4 #Canada Tamil News #Tamil News
கனடா அரசாங்கம் ஜி. எஸ். ரி. வரியை ரத்துச் செய்யவுள்ளது

பிரதமர் ஜஸ்டின் ருடோ தலைமையிலான அரசாங்கம் ஜீ.எஸ்.ரீ வரி தொடர்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

 நாட்டில் நிலவிவரும் வீட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.

 வாடகை குடியிருப்பு கட்டுமானம் தொடர்பிலான ஜீ.எஸ்.ரீ வரி அளவீடு ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு முதல் கனடிய மத்திய அரசாங்கம் இது தொடர்பில் பொது மக்களுக்கு வாக்குறுதி ஒன்றை அளித்திருந்தது.

 இந்த வாக்குறுதியின் பிரகாரம் கனடா ஜீ.எஸ்.ரீ வரியை ரத்து செய்ய தீர்மானித்துள்ளது.

 நாளுக்கு நாள் நாட்டில் வீட்டு விலைகள் உயர்வடைந்து செல்லும் நிலையில் வீடு கட்டுமானத்திற்காக அளவீடு செய்யும் ஜீ.எஸ்.ரீ வரியை ரத்து செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

 இவ்வாறு வரி அளவீடு ரத்து செய்யப்படுவதனால் வீடு நிர்மாணிப்பதற்கான செலவுகளை குறைக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!