உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைப் பாதுகாத்து கொள்ளுங்கள்-அவசர வேண்டுகோள்

#SriLanka #Bank #Lifestyle #Lanka4 #money
Kanimoli
7 months ago
உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைப் பாதுகாத்து கொள்ளுங்கள்-அவசர வேண்டுகோள்

உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருப்பதாக கூறி , உங்கள் விவரங்களை உள்ளிடும்படி கேட்டு மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி (ஈமெயில் , வாட்சப்ப் , பேஸ்புக் , டெலிகிராம் ) ஊடக வரலாம் . அந்த செய்தியில் ஒரு இணைப்பு (Link ) சேர்க்கப்பட்டிருக்கும் . 

 அந்த லிங்க் ஐ கிளிக் செய்து இணைப்பின் ஊடாக செல்லும்போது இலங்கை தபால் சேவையின் இணையதளத்தை ஒத்த இணையத்தளத்திற்குள் நுழைகிறீர்கள். ஆனால் அது உண்மையான இலங்கை தபால் சேவை இணையத்தளம் அல்ல. அஞ்சல் இணையதளம் போல் தோற்றமளிக்க உருவாக்கப்பட்ட போலி இணையதளம். அந்த போலி மெயில் இணையதளத்திற்கு சென்றதும், அது உங்கள் பெயர் மற்றும் முகவரி விவரங்களை உள்ளிடும் படி கேட்கும் . 

 இவ்வாறான விபரங்களை வழங்கிய பின்னர் 99/= ரூபா கட்டணம் ஒன்றை செலுத்துமாறு கேட்கும் . அந்த 99/= ரூபாயை செலுத்த உங்கள் வங்கி அட்டையை உள்ளிட சொல்லும் . உங்கள் வங்கி அட்டையை உள்ளிட்ட பிறகு உங்கள் வங்கி கணக்கு மிகுதி பூச்சியமாக மாறி உங்கள் பணம் பறிபோனதை அவதானிப்பீர்கள் . இதை பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தவும் . 

 ஏமாறாதீர்கள் குறிப்பாக ஆன்லைன் ஆர்டர்கள் மூலம் பொருட்களை கொள்வனவு செய்பவர்கள் அவதானமாக இருக்கவும் . Verfied செய்யப்பட்ட இணையதளங்களில் மாத்திரம் உங்கள் வங்கி அட்டை இலக்கங்களை உள்ளிடுங்கள் அவதானமாக இருங்கள்.