வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டியவைகள் பாகம் 03.

#Lifestyle #Lanka4 #லங்கா4 #வாழ்க்கை #life
Mugunthan Mugunthan
8 months ago
வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டியவைகள் பாகம் 03.

நம்மில் பலர் தொடர்ந்து கோவில்,சித்தர்வழிபாடு,தியானம்,அன்னதானம் என்றெல்லாம் தொடர்ந்து ஏதாவது மாதக்கணக்கிலோ வருடக்கணக்கிலோ பின்பற்றிக்கொண்டே இருப்பார்கள்;

ஆனால்,அவர்களின் வாழ்வில் ஒருசிறு முன்னேற்றமும் இராது; இப்படிப்பட்டவர்களுக்கு அவர்களின் பிறந்த ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருக்கும்; அல்லது முன்னோர்களின் சாபம் இருக்கும்; அதைக் கண்டறிந்து அதற்குரிய பூஜைகளையும்,பரிகாரங்களையும் செய்யாதவரையில் ஒரு இஞ்ச் கூட வாழ்வில் உயர முடியாது; 

இப்படிப்பட்டவர்கள் ஒரே ஒரு சித்தர் அல்லது ஒரே ஒரு தெய்வ வழிபாட்டில் அளவுகடந்த வெறியுடன்/ஈடுபாட்டை மட்டுமே காட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்தபோது உணர முடிந்தது;

 அல்லது தனது வாழ்க்கைத் துணையைத் தவிர,வேறு ஒரு துணையோடும் வாழ்ந்து வருவார்கள்: அல்லது பணம் கொடுத்து சுகம் வாங்கும் சுபாவம் இவர்களுக்கு இருக்கும்; இப்படிப்பட்டவர்களுக்கு இறைவழிபாட்டுக்கான பலன்கள் வந்து சேரும்;ஆனால்,நிலைக்காது;

ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் உறுதியாக இல்லாத வரை இந்த துரதிஷ்டம் தொடரத் தான் செய்யும்.. . .