பிரான்ஸ் இல் துவில் சுற்றுலாத்துறை முன்னேறியுள்ளது

#Covid 19 #France #Tourist #Lanka4 #லங்கா4 #சுற்றுலா #Visit #பிரான்ஸ்
Mugunthan Mugunthan
7 months ago
பிரான்ஸ் இல் துவில் சுற்றுலாத்துறை முன்னேறியுள்ளது

கொவிட் 19 காலப்பகுதியில் வீழ்ச்சியடைந்த சுற்றுலாப்பயணிகளின் வருகை, நடப்பு ஆண்டில் மீண்டும் அதிகரித்துள்ளதாக இல் து பிரான்சுக்கான சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.

 இவ்வருடத்தின் முதல் அரை ஆண்டில் இல் து பிரான்சுக்குள் 21.5 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர். சென்ற 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 17% சதவீதம் அதிகரிப்பாகும்.

 இல் து பிரான்சுக்குள் உள்ள விடுதிகள் தங்குமிடங்களுக்கு 16.4 மில்லியன் பேர் வருகை தந்துள்ளனர். 2019 ஆம் ஆண்டின் முதல் அரை ஆண்டில் இந்த எண்ணிக்கை 17.3 மில்லியன் பேராக பதிவாகியிருந்தது.

 செப்டம்பர் மாதத்தில் ரக்பி உலகக்கிண்ணம் இடம்பெற உள்ளதை அடுத்து, இந்த போட்டிகளைக் காண 450,000 வெளிநாட்டவர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.