தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ஜனநாயகன் படத்தின் கிளிம்ஸ் (வீடியோ)
#Actor
#TamilCinema
#Vijay
#Movie
#Politician
Prasu
4 months ago
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. 'ஜனநாயகன்' படத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ளார்.
இது விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். வில்லனாக பாபி தியோல் நடிக்கிறார்.
இவர்களுடன் சேர்ந்து முக்கிய கதாப்பாத்திரங்களில் நரேன், மமிதா பைஜு, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜூன் 22ம் தேதி நடிகர் விஜய் தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்.
இந்நிலையில் விஜய் பிறந்தநாளை ஒட்டி நள்ளிரவு 12 மணிக்கு 'ஜன நாயகன்' படத்தின் பர்ஸ்ட் ரோர் (கிளிம்ஸ் வீடியோ) வெளியாகி உள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
