கனடா பிரதமர் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா செல்லவுள்ளார்

#India #PrimeMinister #Canada #Lanka4 #லங்கா4 #Visit
கனடா பிரதமர் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா செல்லவுள்ளார்

ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ Justin trudeau இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 நடப்பு ஆண்டிற்கான ஜி-20 உச்சி மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்தி வருகிறது. இந்த மாநாடு டெல்லியில், வருகிற செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.

 ஜி-20 உச்சி மாநாடு இந்த நிலையில், கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவுக்கு வருகை தருகிறார் என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது. இது தொடர்பில் கனடா பிரதமரின் அலுவலகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், பிரதமர் ட்ரூடோ இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகருக்கு செல்ல இருக்கிறார்.

 அவர் வருகிற செப்டம்பர் 5 மற்றும் 6 ஆகிய தினங்களில் நடைபெற உள்ள ஆசியன் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இதனை தொடர்ந்து, அவர் செப்டம்பர் 7 மற்றும் 8 ஆகிய தினங்களில் சிங்கப்பூருக்கு இருதரப்பு பயணம் மேற்கொள்கிறார்.

 இதன்பின், வருகிற செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் ஆகிய தினங்களில் இந்தியாவின் டெல்லியில் நடைபெற உள்ள ஜி-20 உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்க இருக்கிறார் என தெரிவித்துள்ளது.

 உலகிலுள்ள மக்களின் வருங்காலம் சிறப்பாக அமைவதற்கான பணிகளை கட்டமைப்பதற்காக மற்றும் இன்றைய சர்வதேச நெருக்கடியை எதிர்கொள்ள சர்வதேச தலைவர்களுடன் இணைந்து பிரதமர் ட்ரூடோ பணியாற்றுவார். 

அவர், ஐ.நா.வின் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை ஊக்குவிப்பார். பருவநிலை மாற்றம், சர்வதேச நிதி மைய சீர்திருத்தம், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, பாலின சமத்துவம் மற்றும் மேம்பட்ட சர்வதேச சுகாதாரம் ஆகிய பகுதிகளில் ஒருங்கிணைந்த செயல்பாட்டை அதிகரிப்பதற்காக அவர் பேசுவார் என அறிக்கை தெரிவிக்கின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!