கனடாவில் பிள்ளைகளையும் கொன்று தானும் தற்கொலை செய்த நபர்!
#Canada
#children
#Suicide
#Lanka4
#லங்கா4
#கனடா
Mugunthan Mugunthan
2 years ago
கியூபிக் மாகாணத்தில் தனது இரண்டு பிள்ளைகளையும் படுகொலை செய்த தந்தை ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த கொடூர சம்பவம் கியூபெக் மாகாணத்தின் ஜோலியேட் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இரண்டு பிள்ளைகள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாகாண போலீசார் தெரிவிக்கின்றனர்.
இரண்டு பிள்ளைகளையும் கொன்ற குறித்த நபர் பின்னர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மொன்றியாலில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள Notre-Dame-des-Prairies என்னும் இடத்தில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இந்த கொலைச் சம்பவத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை.