கனடாவில் சாலையில் ஏற்பட்ட குழி காரணமாக விபத்துக்கள்
#Canada
#Accident
#Road
#Lanka4
#விபத்து
#லங்கா4
#கனடா
Mugunthan Mugunthan
2 years ago
கனடாவின் தென் மேற்கு லண்டன் பகுதியில் அமைந்துள்ள பாதை ஒன்றில் ஏற்பட்ட குழி காரணமாக மிஸ்ஸசாக பகுதியைச் சேர்ந்த சாரதி ஒருவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
பாதையில் பாரிய ட்ரக் வண்டி ஒன்றை செலுத்திச் சென்ற குறித்த சாரதி திடீரென குழியில் வாகனம் வீழ்ந்த காரணத்தினால் உயிரிழந்துள்ளார். 59 வயதான சாரதி ஒருவரே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
வெள்ள நிலைமைகள் காரணமாக இவ்வாறு பாதையில் திடீரென குழி ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த சாரதியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களை வெளியிடுவதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.