கனடா பிரதி பிரதமருக்கு அபராதம் விதிக்கப்பட்டது

#PrimeMinister #Canada #Lanka4 #லங்கா4 #கனடா
கனடா பிரதி பிரதமருக்கு அபராதம் விதிக்கப்பட்டது

கனடா நாட்டில் வேகமாக வாகனத்தைச் செலுத்தியதால் அந்நாட்டு பிரதி பிரதமருக்கு அபராதம் செலுத்த நேரிட்டது.

கனடாவின் பிரதிப் பிரதமர் கிறிஸ்டியா பரிலாண்டுக்கு இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் தமக்கு சொந்தமாக ஒரு கார் இல்லை என ஃப்ரீ லேண்ட் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இவர் வாகத்தினை வேகமாக செலுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் அல்பர்ட்டா மாகாண அதிகாரிகள் ப்ரீலாண்டுக்கு 273 டாலர்கள் அபராதம் விதித்துள்ளனர். மணிக்கு 132 கிலோ மீட்டர் வேகத்தில காரை செலுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 அல்பர்ட்டா மாகாணத்தில் அதிவேகமாக வாகனங்கள் செலுத்தக்கூடிய வேகக் கட்டுப்பாடானது மணிக்கு 110 கிலோமீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் எப்போது இடம் பெற்றது என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.

 கிறிஸ்டியா ப்ரிலாண்ட் அதிக அளவில் சைக்கிள் ஓட்டத்தை விரும்புபவர் என்றாலும் இவர் இவர் காரை செலுத்திய அதிக வேகத்திற்காக அத்தொகையை முழுமையாக செலுத்தினார். இவர் சைக்கிளில் அதிக பயணங்களை மேற்கொள்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!