பிரதமர் ஜஸ்டின் ரூடோவிற்கு ஆதரவு நல்கிய கனடா மக்கள்

கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ, நாட்டு மக்களுக்கு நன்றி பாராட்டியுள்ளார். மக்கள் தமக்கு வழங்கி வரும் ஆதரவிற்கு நன்றி பாராட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனைவியை பிரிவது தொடர்பில் வெளியிட்ட அறிவித்தலைத் தொடர்ந்து தமக்கு கிடைக்கப் பெற்ற ஆதரவு தொடர்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மனைவி கிரகரி ரூடோவை பிரிவதாக அறிவிப்பு வெளியானது முதல் பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக வழங்கிய ஆதரவு, ஆறுதல் வார்த்தைகள் தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்காக தாம் அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2ம் திகதி 18 ஆண்டு கால திருமண வாழ்க்கை நிறைவுக்கு வருவதாக ட்ரூடோ தம்பதியினர் அறிவித்திருந்தனர்.
குடும்ப வாழ்க்கை தொடர்பிலான அழுத்தங்களிலிருந்து வெளியேறி தொடர்ந்தும் நாட்டு மக்களுக்கான சேவைகளில் தீவிர முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.



