கனடா கொலம்பியாவில் கடத்தப்படவிருந்த ஆமைகள் மீட்கப்பட்டுள்ளன
#Canada
#Lanka4
#லங்கா4
#கனடா
Mugunthan Mugunthan
2 years ago
கொலம்பியாவில் கடத்தப்படவிருந்த அரியவகை ஆமைகள் ஆயுத படைகளால் மீட்கப்பட்டு அனைத்தும் மீண்டும் கடல் பகுதியில் கொண்டு விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தப்பட இருந்த இந் 43 அரியவகை ஆமைகளை கொலம்பிய ஆயுத படையினர் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இவற்றில் 25 ஆமை குஞ்சுகள் மற்றும் மூன்று வளர்ந்த ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளும் அடங்கும்.
இந்த ஆமைகளின் பெருக்கம் பெருமளவில் குறைந்து வருகின்றன என தெரிவிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட அனைத்து ஆமைகளும் மீண்டும் கடலில் விடப்பட்டதாக கூறப்படுகிறது.