கறிவேப்பிலை சட்னி இப்படி செய்யுங்க

#India #Recipe #Cooking #Food #2023 #Tamilnews
Mani
2 years ago
கறிவேப்பிலை சட்னி இப்படி செய்யுங்க

தேவையான பொருட்கள்:

  • 3 தக்காளி
  • 6 மிளகாய் வற்றல்
  • 10 சின்ன வெங்காயம்
  • 10 கொத்து கறிவேப்பிலை
  • 11/2 தேக்கரண்டி வெள்ளை உளுத்தம் பருப்பு
  • 1/2 தேக்கரண்டி உப்பு
  • 11/2 தேக்கரண்டி கடுகு
  • 1 மேசைக்கரண்டி கடலைப் பருப்பு
  • 2மேசைக்கரண்டி எண்ணெய்

செய்முறை:

  • தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைக்கவும். மற்ற தேவையானப்பொருட்களை தயாராக எடுத்து கொள்ளவும்.
  • வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, வெள்ளை உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். அதனுடன்சின்ன வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் அதில் கடலைப்பருப்பு, மிளகாய் வற்றலை சேர்த்து வதக்கவும்.
  • அதனுடன் தக்காளியை சேர்த்து நன்கு வதங்கியதும் கறிவேப்பிலையை போட்டு நன்கு வதக்கி விட்டு ஆறவைக்கவும்.
  • பிறகு ஆறவைத்தப் பொருட்களுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு மையாக அரைத்து எடுக்கவும். சுவையானகறிவேப்பிலை சட்னி தயார்.
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!