ஐரோப்பாவில் எரிவாயு விலை கணிசமாக உயரும் அபாயம்!

#world_news #Lanka4 #European
Dhushanthini K
2 years ago
ஐரோப்பாவில் எரிவாயு விலை கணிசமாக உயரும் அபாயம்!

மேற்கு அவுஸ்ரேலியாவில்  உள்ள LNG ஆலையில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, ஐரோப்பாவில் எரிவாயு விலை கணிசமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 சம்பள பிரச்சினையை முன்னிறுத்தி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தொழிலாளர்கள் தீர்மானித்துள்ளனர்.  

இதன்காரணமாக விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக பிரித்தானியாவில் எரிவாயு விலை நேற்று சுமார் 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஐரோப்பாவிற்கு LNG எரிவாயுவை பெரும்பாலும் ஏற்றுமதி செய்யும் ஆலையாக இது கருதப்படுகிறது. 

இதேவேளை  மேற்கு அவுஸ்ரேலியாவில் உள்ள மேலும் 02 LNG ஆலைகளும் இந்த வேலைநிறுத்தத்திற்கு தமது ஆதரவைத் தெரிவிக்கத் தயாராக உள்ளதுடன், அது தொடர்பான வாக்கெடுப்பு நாளை மறுதினம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!