கண் சொட்டு மருந்து வகைகள் மருந்தகங்களிலிருந்து மீளப்பெறும் கனேடிய அரசு

கனடாவில் கண்களுக்கு பயன்படுத்தப்படும் சொட்டு மருந்து தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. க்ரோமிலின் எனும் கண் சொட்டு மருந்து தொடர்பிலே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
10 மில்லிலீற்றர் அளவுடைய அனைத்து வகையான க்ரோமிலின் கண் சொட்டு மருந்து வகைகள் மருந்தகங்களிலிருந்து மீளப்பெற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த மருந்து வகையினால் ஒவ்வாமை ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்பபடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த க்ரோமிலின் எனும் கண் சொட்டு மருந்தினை பயன்படுத்தும் போது pseudomonas aeruginosa (சூடோமோனாஸ் ஏருகினோசா) எனும் பக்றீரியாவினால் பாதிப்பு ஏற்படும் சாத்தியங்கள் உண்டு.
நோய் எதிர்ப்பு சக்கி குறைந்தவர்களுக்கு இந்த கண் சொட்டு மருந்தினால் பாதிப்பு அதிகம்.
எனினும் இந்த கண் சொட்டு மருந்தினால் பாரதூரமான நோய் நிலைமைகள் எதுவும் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



