கொவிட்-19னின் புதிய திரிபு பிரான்ஸிலும் கோடைக் காலத்தில் பரவலாம்
#Covid 19
#France
#Lanka4
#கொவிட்-19
#லங்கா4
#Summer
#பிரான்ஸ்
Mugunthan Mugunthan
1 year ago

இந்த கோடை காலத்தின் போது கொவிட் 19 வைரசின் புதிய திரிபு ஒன்று பரவும் அபாயம் எழுந்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
"Eris" என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய திரிபு அமெரிக்காவிலும் சில ஐரோப்பிய நகரங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், பிரான்சிலும் பரவும் அபாயம் எழுந்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் பட்டியலிட்டுள்ள கொவிட் 19 திரிபுகளில் இந்த புதிய 'Eris' வகை இறுதியாக இணைக்கப்பட்டுள்ளது.
75 வயதுக்கு மேற்பட்டவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்கும்படி கோரப்பட்டுள்ளது



