பிரான்ஸில் வருமானவரித் துறைக்கு அசையாச் சொத்துக்களை பதியும் கடைசிநாள் இன்று!
#France
#Lanka4
#பதிவு
#லங்கா4
#register
#பிரான்ஸ்
Mugunthan Mugunthan
1 year ago

வருமானவரித் துறையான Impôts இடம் நீங்கள் வாங்கிய சொத்துக்களை (BIENS IMMOBILIERS) பதிவு செய்ய கடைசிச் சந்தர்ப்பமாக இன்று 10ம் திகதி வழங்கப்பட்டுள்ளது.
நீங்கள் வசிக்கும் வீடு கூட சமர்ப்பிக்கப்பட்டள்ளதா, என்பதையும் சரிபார்த்துக் கொள்ளவும். நீங்கள் வாங்கிய புதிய சொத்துக்கள், வாடகைக்கு விடப்பட்ட வீடுகள் என அனைத்து அசையாச் சொத்துக்களையும் வருமானவரித் துறையினரிடம் சமர்ப்பிக்க இன்று 10ம் திகதியே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
30ம் திகதி ஜுன் மாதமே கடைசி நாள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நேரத்திலும் வருமானவரித்துறையின் இணையத்தளமான https://www.impots.gouv.fr/ இயங்காது முடங்கியிருந்த நிலைமையினால் இன்று கடைசித் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் இதனைப் பதியாவிட்டால் உங்கள் ஒவ்வொரு அசையாச் சொத்திற்கும் 150€ விலிருந்து குற்றப்பணம் அறவிடப்படும்.



