பிரான்ஸ் மாற்றுத்திறனாளிகள் காப்பகத்தில் தீ விபத்து
#France
#Home
#Lanka4
#தீ_விபத்து
#fire
#லங்கா4
#Disabled persons
#பிரான்ஸ்
Mugunthan Mugunthan
2 years ago

சில மணி நேரத்திற்கு முன்னர் அல்சாசில் உள்ள கொல்மார் நகரில் (Colmar - Haut-Rhin) உள்ள Wintzenheim மாற்றுத்திறனாளிகள் காப்பகத்தில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதிலிருந்து தீயணைப்புப் படையினரால் 17 பேர் மீட்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயணைப்புப் படையினரின் துரித நடவடிக்கையில் தீ ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனாலும் இன்னமும் மேலும் 11 பேரின் நிலைமைய என்னவென்று தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராந்திய சாலை 417 தீவிபத்தினால் மூடப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது



