இந்து, சைவ ஆன்மீக பக்தர்களை குறி வைக்கும் சில விசமிகளை இனம் காண்போம்!

#SriLanka #Hindu #spiritual
Mayoorikka
9 months ago
இந்து, சைவ ஆன்மீக பக்தர்களை குறி வைக்கும் சில விசமிகளை இனம் காண்போம்!

உலகளாவிய ரீதியில் பரந்த மக்கள் பல மத நம்பிக்கையோடு வழிபாடு செய்து வாழ்ந்து வருகிறார்கள். 

 அதற்கு ஈடாக போலி மதவாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்குள் உன் மதம் பெரிது உன் மதம் சிறிது என பல மத மக்களை அடிபட வைத்து பணம் பெயர், புகழ் பெறுபவர்களும் உள்ளனர். 

 ஆன்மீக கோவில்கள், மன்றங்கள், மசூதிகள், தேவாலயங்களை வியாபார தளங்களாகவும் சிலர் நடாத்தி வருகின்றனர். 

 அந்த ஆன்மீக தலத்துக்கு பக்தர்களில் பலர் தமது ஆன்மீக பசியை தீர்க்க செல்வது வழமை. அதிகமாக வறுமையை போக்க, நோயை குணமாக்க, குடும்ப ஒற்றுமையை பேணவென பாதிக்கப்பட்ட மக்கள் அங்கு செல்கிறார். 

இவர்கள் நோக்கம் தமது குறைகள் நிறைவடைய வேண்டும் என்பதே. இதை சாதகமாக பயன்படுத்தி சில நிர்வாகங்கள், மத தலைவர்கள் மக்களின் மனங்களில் ஒரு அசுத்த காற்றை வீச வைக்க முயல்கிறார்கள், அதில் வெற்றி பெற்றும் இருக்கிறார்கள். 

 உலகளாவிய ரீதியில் அனைத்து மத வழிபாட்டு தலங்களில் சில இடங்களில் பெண்கள், ஆண்கள், சிறுவர்கள், சிறுமியர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். 

 இது உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் நடக்கும் சாதாரண நிகழ்வாக போய்விட்டது. இதற்கு யார் பொறுப்பு? எப்படி இதை களை பிடுங்கலாம் என பார்த்தால் ஒரு சிலர் செய்யும் சிறிய பிழையை பெரிதாக்குவது சமூக அக்கறை அற்ற சில கேடுகெட்ட ஊடகங்களே. 

 கோவிலை எடுத்துக்கொண்டால் இந்துக்கள் சென்று வழிபடுவதால் அவரவர் வழிபடும் முறைக்கேற்ப அவர்கள் பலனை பெறுகிறார்கள். அதற்காக அக்கோவிலில் நிர்வாகம் அல்லது அர்ச்சகர் செய்யும் தவறுக்கும் அவர்களுக்கும் தொடர்பு இல்லை.

 மக்களே கோவிலை ஒட்டுமொத்தமாக யாரும் குறை சொல்ல முடியாது அங்கே இருக்கும் சீர்கேட்டுக்கு உடந்தையாக இருக்கும் நபரோ நபர்களோ மக்களால் துரத்தப்படவேண்டியவர்கள். 

 ஆம் துணிந்து அவ்விடயத்தில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நீதியாக தண்டனைபெற வைக்கவேண்டும். அதற்காக அக்கோவிலையோ செல்லும் பக்தர்களையோ இழிவு செய்தல் தவறு. 

அப்படி நடக்குமாயின் பக்தர்கள் கோவிலுக்கு வருவது குறைந்து மதம் மாறும் சம்பவங்கள்தான் நடக்கும். வரும் காலகட்டங்களில் சைவ மதம் அழி ந்து போய்விடும். 

 அன்பானவர்களே. நாம் எமது மத கலாசாரத்தை கைவிட முடியாது. அதற்காக எமது வழிபாட்டு தனங்களையோ பக்தர்களையோ துஸ்பிரயோகம் செய்ய துணிபவன் எம்மதத்தவனாக இருந்தாலும் வீசி எறியுங்கள். 

 அதற்கு அனைத்து நிர்வாக உறுப்பினர்களையோ பக்தர்களையோ பிழை கூறுவது தவறு. 

 எனவே பிழைகளையும் செய்பவர்களையும் களைந்து வழிபாட்டு தலங்களை நாம் காப்போம்.

 என்றென்றும் இதற்காக லங்கா4.கொம் தோள் கொடுக்கும் என உறுதி பூண்கிறது. 

 நன்றி

 செல்வா-சுவிஸ்