நைஜர் வான்பரப்பு மூடப்பட்டுள்ளது : பிரான்ஸ் விமானங்களின் பறக்கும் நேரம் தாமதம்
#Flight
#France
#Lanka4
#லங்கா4
#பிரான்ஸ்
Mugunthan Mugunthan
1 year ago

பிரான்சிற்கான நைஜேரின் எச்சரிக்கை மற்றும் ஆபத்தைத் தொடர்ந்து நைஜேரின் வான்பரப்பு மூடப்பட்டுள்ளது.
இதனால் நியாமே, உகாதூகூ மற்றும் பமாக்கோவிற்கான விமான சேவைகளை எயார் பிரான்ஸ் இரத்துச் செய்துள்ளது.
மற்றைய கிழக்கு ஆபிரிக்காவிற்கான வான் சேவைகள் உறுதிப்படுத்தப்பட்டாலும், அவற்றிற்கான பறப்புகள் 15 நிமிடத்திலிருந்து இரண்டு மணித்தியாலம் வரை நீட்டிக்கப்படும் எனவும் பல வான்பரப்புகளைச் சுற்றிச் செல்வதனால் இந்தத் தாமதம் ஏற்படும் எனவும் எயார் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
நைஜேரிற்கான வான்பரப்பு மூடப்பட்டதால் எயார் பிரான்ஸ் மட்டுமன்றி ஏனைய விமானசேவை நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.



