கனடா பிரதமர் மற்றும் அவரது மனைவி விவாகரத்து செய்ய தீர்மானம்

#PrimeMinister #Canada # divorce
Prasu
1 year ago
கனடா பிரதமர் மற்றும் அவரது மனைவி விவாகரத்து செய்ய தீர்மானம்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி சோபி கிரெகோயர் இருவரும் திருமணமான 18 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி இருவரும் விவாகரத்து தொடர்பாக தங்கள் இன்ஸ்டாகிராமிடம் சுருக்கமாக பதிவிட்டிருந்தனர்.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதிவில், "பல அர்த்தமுள்ள மற்றும் கடினமான உரையாடல்களுக்கு பின், நாங்கள் பிரிய முடிவு செய்துள்ளோம். எப்போதும் போல, நாங்கள் ஒருவரையொருவர் ஆழமான அன்பும் மரியாதையும் கொண்ட ஒரு நெருக்கமான குடும்பமாக இருக்கிறோம்" என்று அதில் பதிவிட்டிருந்தார்.

இதுதொடர்பான பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையில், தம்பதியினர் சட்டப்பூர்வ பிரிவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர் என்று உறுதிப்படுத்தியது.

 கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி சோபி கிரெகோயர் ஆகிய இருவரும் 2005ஆம் ஆண்டு மாண்ட்ரீலில் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சேவியர் (15) எல்லா கிரேஸ் (14) மற்றும் ஹாட்ரியன் (9) ஆவார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!