சத்தான சிவப்பு அவல் கிச்சடி செய்வது எப்படி?

#India #Recipe #Food #Tamilnews #Tamil Food
Mani
2 years ago
சத்தான சிவப்பு அவல் கிச்சடி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

  • 2 கப் சிவப்பு அவல்
  • 2 கைப்பிடி பாசிப்பருப்பு
  • 10 சின்ன வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 10 கறிவேப்பிலை
  • 1 மேசைக்கரண்டி தேங்காய்த் துருவல்
  • 1 கேரட்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 3 தேக்கரண்டி எண்ணெய்
  • 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
  • 1/2 தேக்கரண்டி கடுகு
  • 1/2 தேக்கரண்டி கடலைப்பருப்பு
  • உப்பு தேவையான அளவு
  • கொத்தமல்லித்தழை தேவையான அளவு

செய்முறை:

  • வெங்காயத்தை நீளமாகவும், கேரட்டை பொடியாகவும் நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயையும் நறுக்கிக் கொள்ளவும்.
  • பாசிப்பருப்பைக் கழுவி மலர வேக வைக்கவும். (குழைந்துவிடக் கூடாது). அவலை நன்கு களைந்து கல் அரித்து தண்ணீரை லேசாகப் பிழிந்து வைக்கவும்.
  • அடிகனமான வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும்
  • சிவந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் கேரட் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
  • அதனுடன்அவல், வேக வைத்த பாசிப்பருப்பு மற்றும் உப்புச் சேர்த்து கிளறவும்.பிறகு தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறிவிட்டு, கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். சுவையான, சத்தான சிவப்பு அவல் கிச்சடி ரெடி.
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!