சர்தார்' படத்தின் இரண்டாம் பாகம் தீவிரம் காட்டும் படக்குழு
#Cinema
#Actor
#Actress
#TamilCinema
#Tamilnews
Mani
2 years ago

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் சர்தார். இதில் வில்லனாக ஹிந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
'சர்தார்' திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடி வரை வசூல் செய்தது. இதனால் தற்போது 'சர்தார்' படத்தின் இரண்டாம் பாகத்தின் தயாரிப்பில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாகவும், விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



