ஜவான் படத்தின் முதல் பாடல் வெளியானது
#India
#Cinema
#TamilCinema
#Tamilnews
Mani
2 years ago
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'. இப்படத்தில் ஷாருக்கான் என்ற பிரபல நடிகர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் யோகிபாபுவும் நடித்துள்ளார். வழக்கமாக தமிழ் படங்களுக்கு இசையமைக்கும் அனிருத், இந்தப் படத்தின் மூலம் பாலிவுட் படத்துக்கு முதன்முறையாக இசையமைக்கிறார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஜவான் படத்தின் "வந்த எடம்" பாடல் இன்று மதியம் 12.50 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அறிவிப்பின்படி “வந்த எடம்” பாடல் வெளியாகியுள்ளது.