சந்திரமுகி முதல் பாகம் வெற்றி தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து “சந்திரமுகி 2” படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பி.வாசு படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். கங்கனா ரனாவத் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்களை படக்குழுவினர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.
இதையடுத்து படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக சந்திரமுகி 2 படம் தொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
இந்நிலையில், சந்திரமுகி 2 படத்தின் முக்கிய கதாபாத்திரமான வேட்டையன் ராஜாவின் முதல் தோற்றம் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.