கமல் மீண்டும் பெண் வேடத்தில் நடிக்கிறார் என தகவல்
#India
#Cinema
#Actor
#TamilCinema
Mani
2 years ago
கதை மற்றும் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு தோற்றத்தை மாற்றிய முதல் நடிகர் கமல்ஹாசன். 'அவ்வை சண்முகி' படத்தில் பெண் வேடமிட்டு அவர் நடித்த காட்சிகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது.
அந்த படம் ரசிகர்கள் படத்தை கொண்டாடி மாபெரும் வெற்றி பெற்றது. பெண் கதாபாத்திரத்தில் கமல் நடித்ததற்கு ஏராளமான பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தனர். 'அவ்வை சண்முகி' படத்தில் நடித்ததைத் தொடர்ந்து 'தசாவதாரம்' படத்தில் வயதான பாட்டியாக கமல் நடித்தார். படப்பிடிப்பின் போது பல மணி நேரம் மேக்கப் போட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் ‘இந்தியன் 2’ படத்தின் குறிப்பிடத்தக்க காட்சி ஒன்றில் கமல்ஹாசன் பெண் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக இணையதளத்தில் தகவல் பரவி வருகிறது. இந்த செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.