தனுஷ் படத்தில் நாகார்ஜுனா, ராஷ்மிகா!
#India
#Cinema
#Actor
#Actress
#TamilCinema
#2023
#Tamilnews
#ImportantNews
Mani
2 years ago

தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரியும் தனுஷ் நடிப்பில் ஒரு படத்தையும் இயக்கியுள்ளார். இது தமிழில் வாத்தி, தெலுங்கில் 'சர்' என்ற பெயர்களில் வெளியானது. தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.
அடுத்து தனது 50-வது படத்தில் தனுஷ் நடித்து அவரே டைரக்டும் செய்ய இருக்கிறார். இந்த படத்துக்கு பிறகு தனுஷ் நடிக்க உள்ள படத்தை பிரபல தெலுங்கு டைரக்டர் சேகர் கம்முலா இயக்க இருப்பதாகவும், இதில் தனுசுடன் இணைந்து நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கு திரையுலகின் முக்கிய நடிகரான நாகார்ஜுனா, முக்கிய கதாநாயகனாக இருக்கிறார். ராஷ்மிகா மற்றும் சாய் பல்லவி ஆகியோருடன் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.



