பிரபல இந்தி நடிகர் ஜெயந்த் சாவர்க்கர் மரணம்

#India #Cinema #TamilCinema #Tamilnews
Mani
2 years ago
பிரபல இந்தி நடிகர் ஜெயந்த் சாவர்க்கர் மரணம்
பிரபல இந்தி நடிகரான ஜெயந்த் சாவர்க்கருக்கு வயது முதிர்வு மற்றும் ரத்த அழுத்த பிரச்சனை காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, தானேயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி ஜெயந்த் சாவர்க்கர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 87. ஜெய்ந்த் சாவர்க்கர் இந்தி, மராத்தி மொழிகளில் பல படங்களில் நடித்து இருக்கிறார். தமிழில் வெளியான 'சிங்கம்' படத்தின் இந்தி ரீமேக்கிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். 'ஹரிஓம்', 'சதாசிவ்' உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

அவரது மனைவி உஷா பெண்ட்சே, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். ஜெயந்த் சாவர்க்கர் மறைவுக்கு இந்தி நடிகர்-நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!