'ரெஜினா' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு
#Cinema
#TamilCinema
#Amazon
#Tamilnews
#ImportantNews
#VideoPlayer
#Movie
Mani
2 years ago

'ரெஜினா' படத்தை மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கியுள்ளார், இப்படத்தில் சுனைனா கதாநாயகியாக நடித்துள்ளார். எல்லோ பியர் புரொடக்ஷன் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு சதீஷ் நாயர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களை யுகபாரதி, விவேக் வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ்.ஆர் எழுதியுள்ளனர்.
இப்படத்தை பவி கே. பவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் ஜூன் 23 அன்று திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில் 'ரெஜினா' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் நாளை (ஜூலை 25) அமேசன் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இத்தகவலை படக்குழுவினர் போஸ்டர் மூலம் தெரிவித்துள்ளனர்.



