ரோட்ஸ் பகுதியில் காட்டுத் தீயில் சிக்கியிருக்கும் பிரித்தானியர்களுக்கு அவசர அறிவிப்பு!

#world_news #Lanka4
Dhushanthini K
2 years ago
ரோட்ஸ் பகுதியில் காட்டுத் தீயில் சிக்கியிருக்கும் பிரித்தானியர்களுக்கு அவசர அறிவிப்பு!

கிரேக்க நாட்டின் பிரபல ரோட்ஸ் உல்லாசத் தீவில் கட்டுப்படுத்த முடியாதவாறு காட்டுத் தீ பரவிவருகின்றது. இதனால் அங்கிருந்து பல்லாயிரக் கணக்கிலான வெளிநாட்டவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரித்தானியா சுற்றுலா பயணிகளுக்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் பயண ஆலோசனைகளை வழங்கியுள்ளது. 

இதன்படி பிரித்தானியர்கள் யாரேனும்  கியோடாரி, பெஃப்கோய், லிண்டோஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில் சிக்கியிருந்தால், அவசர சேவைகளின் வழிக்காட்டுதல்களை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

உடனடி ஆபத்தில் இருப்பவர்கள்  கிரேக்க அவசர சேவையான 112 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இதற்காக  கிரேக்க அரசாங்கம் நெருக்கடி மேலாண்மை பிரிவை நிறுவியுள்ளது எனவும் அவர்களை +30 210 368 1730 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள முடியும் எனவும்அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை பிரிட்டிஷ் தூதரக உதவிக்கு, +4420 7008 5000 என்ற எண்ணிற்கு அழைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!