இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு தீர்வு காண ஐ.நா பொதுச்சபையால் புதிய தீர்மானம் சமர்பிப்பு!

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு இரு நாடுகள் தீர்வு காணக் கோரும் தீர்மானம் நேற்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
142 நாடுகள் ஆதரவாகவும், 10 நாடுகள் எதிராகவும், 12 நாடுகள் வாக்களிக்கவில்லை.
தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த நாடுகளில் அமெரிக்காவும் இஸ்ரேலும் அடங்கும்.
கடந்த ஜூலை மாதம் சவுதி அரேபியா மற்றும் பிரான்சின் மத்தியஸ்தத்துடன் நடைபெற்ற ஐ.நா.வின் சர்வதேச மாநாட்டின் விளைவாக ஏழு பக்கத் தீர்மானம் நேற்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.
செப்டம்பர் 22 அன்று நடைபெறும் அரச தலைவர்கள் உச்சி மாநாட்டின் போது பாலஸ்தீனத்தை ஒரு சட்டபூர்வமான நாடாக அங்கீகரிக்க பிரான்ஸ், கனடா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் தயாராகி வரும் சூழலில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், ஐ.நா. பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தை நிராகரிப்பதாக இஸ்ரேல் கூறுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



