பாகிஸ்தானில் காவல் நிலையம் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் பலி 10 போலீசார் படுகாயம்
#India
#world_news
#Pakistan
#Tamilnews
#Breakingnews
#Bomb
Mani
2 years ago

பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் உள்ள பாரா தாலுகா அலுவலக வளாகத்தில் போலீஸ் நிலையம் செயல்படுகிறது. இந்த காவல் நிலையத்தில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வீசப்பட்டன, இதன் விளைவாக நிலையம் மற்றும் அருகிலுள்ள பல கட்டிடங்கள் சேதமடைந்தன.
இந்த தாக்குதலில் போலீஸ்காரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார். மேலும் 10 போலீசார் பலத்த காயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. காவல் நிலையத்தை குறிவைத்து வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



