ஜப்பானில் வெப்பநிலை அதிகரிப்பு - உயிராபத்துக்கள் ஏற்படும் என எச்சரிக்கை

#world_news #Japan
Dhushanthini K
2 years ago
ஜப்பானில் வெப்பநிலை அதிகரிப்பு -  உயிராபத்துக்கள் ஏற்படும் என எச்சரிக்கை

ஜப்பானில் வெப்பநிலையின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக அங்கு Heatstoroke  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

சில பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தொடுவதால்,மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். 

ஜப்பானின் 47 மாகாணங்களில், வெப்ப எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக கிழக்கு மற்றும் தென்மேற்கில் உள்ள 20 மாகாணங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தலைநகர் டோக்கியோ உட்பட சில இடங்களில் வெப்பநிலை கிட்டத்தட்ட 40 டிகிரி செல்சியஸ் (104 டிகிரி பாரன்ஹீட்) வரை உயர்ந்ததால், உயிராபத்து ஏற்படும் வகையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் அதிகளவு நீரை பகிருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேவையில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த வெப்பநிலையானது, மூளை, சிறுநீரகங்கள் மற்றும் பிற உறுப்புகளை சேதப்படுத்தும் வெப்ப பக்கவாதத்தை தூண்டுவதன் மூலம் உயிராபத்துக்கள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!