புர்ஜ் கலிஃபா கோபுரத்தில் மூவர்ணக் கொடி ஒளிரும் வகையில் பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு

#India #PrimeMinister #world_news #Breakingnews
Mani
2 years ago
புர்ஜ் கலிஃபா கோபுரத்தில் மூவர்ணக் கொடி  ஒளிரும் வகையில் பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டு நாள் பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார்.

அபுதாபிக்கு சென்றுள்ள பிரதமர் மோடியை ஐக்கிய அரபு அமீரத்தின் அதிபர் முகமது பின் சையத் அல் நஹ்யான் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தார்.

இந்நிலையில், துபாயில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான கோபுரமான புர்ஜ் கலிஃபாவில் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக இந்திய தேசியக் கொடியின் மூவர்ணங்களால் ஒளிரூட்டப்பட்டது. இது காண்போரை வியக்க வைத்தது.

மேலும், புர்ஜ் கலிஃபாவின் கோபுரத்தில் பிரதமர் மோடியின் முகமும் ஒளிரும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரதமர் மோடியின் படத்தின் கீழ், கீழ் மதிப்பிற்குரிய நரேந்திர மோடிக்கு நல்வரவு என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!