அதிவேக இணைய சேவையை அறிமுகப்படுத்தவுள்ள பிரான்ஸ்

#France #government #service #Mobile
Prasu
2 years ago
அதிவேக இணைய சேவையை அறிமுகப்படுத்தவுள்ள பிரான்ஸ்

பிரான்ஸில் 6G தொலைத்தொடர்பு சேவை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளுக்ளு அரசாங்கம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘எதிர்காலத்துக்கான இணையம்’ என தெரிவிக்கப்பட்டும் இந்த 6G இணைய வேகமானது 5G தொழில்நுட்பத்தை விட 100 மடங்கு வேகமாகும். பிரான்சில் சில 5G இணையம் வழங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கூட முற்றுப்பெறாத நிலையில், இந்த புதிய 6G இணையத்தினை வழங்க அரசு தயாராகி வருவதாக தொழிற்ல்நுட்ப மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

2030 ஆம் ஆண்டினை இலக்கு வைத்து இந்த தொழில்நுட்பம் ஆராய்ச்சி மற்றும் உருவாக்கம் (R&D) செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

 Orange தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் கைகோர்த்து இந்தற்கான பணிகளை அரசு ஆரம்பித்துள்ளது எனவும், இதுவே எதிர்காலத்துக்கான அதிவேக இணையமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தற்போது பிரான்சில் வெறும் 10% சதவீதம் மட்டுமே 5G இணையம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!