நியூயார்க்கில் பெய்த கனமழையால் ஏராளமான சாலைகள் துண்டிப்பு; ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து!

#Flight #America #Newyork #world_news #Rain #HeavyRain #2023 #Tamilnews
Mani
2 years ago
நியூயார்க்கில் பெய்த கனமழையால் ஏராளமான சாலைகள் துண்டிப்பு; ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து!

நியூயார்க் மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நியூயார்க், பாஸ்டன், வெஸ்டர்ன் மைனே மற்றும் வெர்மான்ட் ஆகிய இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால், மக்கள் சிரமங்களுக்கு ஆளாகினர். மழை வெள்ளத்தால்,ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.

தொடர் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக நெவார்க்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், நாடு முழுவதும் பல்வேறு முக்கிய இடங்களுக்கான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!