இங்கிலாந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 20 வயது சீக்கியப் பெண்

#Arrest #Women #Sexual Abuse #England #Indian
Prasu
2 hours ago
இங்கிலாந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 20 வயது சீக்கியப் பெண்

இங்கிலாந்தில் 20 வயதுடைய சீக்கியப் பெண் ஒருவர் இரண்டு ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இனவெறித் தாக்குதல்களுக்கும் ஆளாகி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் அந்த பெண்ணிடம் "உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்" என்று கூறியுள்ளது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டவர்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

இங்கிலாந்தின் ஓல்ட்பரி நகரில் இச்சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவையும் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் சந்தேகத்தின் பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தை கண்டித்துள்ள பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் பிரீத் கவுர் கூறுகையில், சமீப காலமாக "இனவெறி" அதிகரித்து வருவது மிகவும் கவலையளிக்கிறது. இது ஒரு தீவிர வன்முறைச் செயல் என கூறியுள்ளார்.

ஒரு மாதத்திற்கு முன்பு வால்வர்ஹாம்டனில் உள்ள ஒரு ரெயில் நிலையத்திற்கு வெளியே மூன்று வாலிபர்களால் வயதான இரண்டு சீக்கியர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த இனவெறி சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!