பாராளுமன்றம் கலைப்பு - நேபாளத்தில் தேர்தல் திகதி அறிவிப்பு

ஊழல் குற்றச்சாட்டுகள், அரசியல் தலைவர்களுடைய வாரிசுகளின் ஆடம்பர வாழ்க்கை ஆகியவை நேபாளத்தில் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தன.
இதற்கிடையே அண்மையில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட அந்நாட்டு ஜென் z இளைஞர்களை மேலும் கோபப்படுத்தியது. இதனால் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி போராட்டம் வெடித்தது.
இளைஞர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் போராட்டம் கலவரமாக மாறியது. 19 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து செப்டம்பர் 9 அன்று சமூக வலைத்தளங்களுக்கு தடை நீக்கப்பட்டது. ஆனால் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரினர்.
எனவே அன்றைய தினமே பிரதமர் சர்மா ஒலி பதவி விலகினார். இந்நிலையில் நேற்று இடைக்கால தலைவராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி (73) பதவியேற்றார்.
அதேவேளை நேபாள பாராளுமன்றமும் கலைக்கப்பட்டது. நேற்று இரவு 11 மணிக்கு பாரளுமன்றம் கலைக்கப்பட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் மேலும் பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2026) மார்ச் 21 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி அறிவித்து உள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



