ரணிலுடன் கொள்கை முரண்பாடுகள் உள்ளன - நாமல்!

#SriLanka #Ranil wickremesinghe #Namal Rajapaksha #Lanka4
Thamilini
2 years ago
ரணிலுடன் கொள்கை முரண்பாடுகள் உள்ளன - நாமல்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கொள்கைப் பிரச்சினை இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை தொகுதிக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

ரணில் விக்கிரமசிங்க நாட்டை பொருளாதார ரீதியில் ஸ்திரமான நிலைக்கு கொண்டு வந்துள்ளதாக தாம் நம்புவதாக தெரிவித்த அவர் மகிந்த ராஜபக்சவின் அரசியல் கொள்கையும்,  ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் கொள்கையும் இதுவரையில் மாறவில்லை எனவும் கூறினார்.  

தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகளை ஜனரஞ்சக கொள்கைகளாக மாற்ற வேண்டிய பொறுப்பு இருப்பதாக சுட்டிக்காட்டிய நாமல் ராஜபக்ஷ,  ரணில் விக்கிரமசிங்கவின் முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையானது மக்களுக்கு நன்மைகளை வழங்குவதற்குத் தேவையான தலைமைத்துவத்தை பாராளுமன்றத்தில் வழங்கும் எனவும் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!