ஐசிசி துடுப்பாட்டத் தரவரிசையில் இலங்கை வீராங்கனை சமரி அத்தபத்து முதலிடம்
#SriLanka
#Women
#Srilanka Cricket
#Lanka4
Kanimoli
2 years ago

மகளிருக்கான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐசிசி துடுப்பாட்டத் தரவரிசையில் இலங்கை வீராங்கனை சமரி அத்தபத்து முதலிடம் பெற்றுள்ளார்.
இன்று வெளியிடப்பட்ட புதிய தரவரிசைப் பட்டியலின்படி, இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து முதலிடம் பெற்றுள்ளார்.
இலங்கை வீராங்கனையொருவர், ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் முதலிடம் பெற்றமை இதுவே முதல் தடவையாகும். சனத் ஜயசூரியவுக்கு அடுத்ததாக ,
ஆண்கள் அல்லது மகளிர் ஒருநாள் சர்வதேச போட்டிளின் துடுப்பாட்டத்துக்கான ஐசிசி தரவரிசையில் முதலிடம் பெற்ற ஒரே இலங்கையர் சமரி அத்தபத்து ஆவார்.



