முதலையை திருமணம் செய்துகொண்ட நகர மேயர்!

#America #world_news
Mayoorikka
2 years ago
முதலையை திருமணம் செய்துகொண்ட நகர மேயர்!

மெக்சிகோ நாட்டில் உள்ள சான்பெத்ரோ ஹுவாமெலுவா நகரத்தின் மேயர் ஹியூகோ சாசா முதலையை திருமணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 இந்த நகரத்தில் அதிகளவில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களிடம் பழமையான பழக்க வழக்கங்களுல் மிருகங்களை திருமணம் செய்வது வழக்கமாகியுள்ளது. 

 இந்நிலையில் மேயர் ஹியூகோ சாசா முதலை ஒன்றை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 பழங்குடியின மக்களின் பழக்க வழக்கங்களின் ஒரு பகுதியாக இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. 

 இயற்கை வளத்தையும், மழை வளத்தையும் பாதுகாக்க வேண்டும்  என்ற பழக்க வழக்கத்தின் அடிப்படையில் இந்த திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. 

 மேயர் முதலைக்கு முத்தம் கொடுப்பது போன்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!