4 வது நாளாக தொடரும் பிரான்ஸ் கலவரம்

#France #world_news #Lanka4 #லங்கா4
4 வது நாளாக தொடரும் பிரான்ஸ் கலவரம்

பிரான்சில் 4 நாட்களுக்கு முன் 17 வயது இளைஞர் பொலிஸாரல் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து பாரிஸ் நகரல் பல இடங்களில் காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே தொடங்கிய மோதல் தொடர்ந்து வருகிறது.

 இந்நிலையில் பெற்றோர் தங்களின் பிள்ளைகளை தெருவில் இறங்கிப் போராடாதவாறு கண்காணிக்கும்படி பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கோரியுள்ளார். 

பிரான்ஸில் 4வது நாளாக கலவரம் நடந்து கொண்டிருக்க அதிபர் மேக்ரான் பிரிட்டிஷ் பாடகர் எல்டன் ஜான் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

பாரிஸின் அக்கார் அரீனாவில் நடந்த எல்டன் ஜான் இசை நிகழ்ச்சியில் அதிபர் மேக்ரான் அவரது மனைவி பிரிஜெட் கலந்து கொண்டனர். அதிபர் மேக்ரான் "சேட்டர்டே நைட் இஸ் ஆல்ரைட் ஃபார் ஃபைட்டிங்", "பர்ன் டவுன் தி மிஷன்" போன்ற பாடல்களுக்கு கால்களால் தாளமிட்டு ரசித்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இப்போராட்டம் தொடர்கையில் நேற்று ஐ.நா. இந்த மோதலை நிறுத்த அழைப்பு விடுத்திருந்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!