மனைவியை போதைக்கு அடிமையாக்கி விபச்சாரத்தில் ஈடுபடுத்தி காணொளி எடுத்த கணவர்

#Arrest #France #Sexual Abuse
Prasu
1 year ago
மனைவியை போதைக்கு அடிமையாக்கி விபச்சாரத்தில் ஈடுபடுத்தி காணொளி எடுத்த கணவர்

பிரான்சை சேர்ந்த லி டொமினிக் என்பவர் தினமும் இரவில் மனைவி பிரான்சுவாவுக்கு போதை மருந்து கொடுத்து பல ஆண்களுக்கு விருந்தாக்கி உள்ளார்.

மனைவிக்கு சந்தேகம் வராமல் டொமினிக் 10 ஆண்டுகளாக இந்தக் கொடுமையைத் செய்து உள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதில் 91 முறை அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். இவை அனைத்தையும் வீடியோ எடுத்து வைத்து உள்ளார். மனைவிக்கு உணவில் லோரஸெபம் என்ற மருந்தை கலந்து கொடுத்து உள்ளார்.

தெற்கு பிரான்சில் உள்ள அவிக்னான் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இந்த குற்ற செயலில் 83 பேரை ஈடுபடுத்தி உள்ளார். இவர்கள் 26 முதல் 73 வயதுக்கு உட்பட்டவர்கள் என கண்டறியப்பட்டு உள்ளது. 

83 பேரில் 51 பேரை கைது செய்து உள்ள போலீசார் அவர்கள் மீது 92 வழக்குகளை பதிவு செய்து உள்ளனர். மற்றவர்களை அடையாளம் காணமுடியவில்லை. குற்றவாளிகளில் தீயணைப்பு வீரர், லாரி டிரைவர், நகராட்சி கவுன்சிலர், வங்கி ஊழியர், ஐடி ஊழியர், சிறைக்காவலர், செவிலியர் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர், இது குறித்து விசாரணை நடத்தி வரும் அதிகாரிகளிடம்,இப்படி நடப்பது தங்களுக்குத் தெரியாது என்றும், சிலர் அவருடைய மனைவி தான் என்று தெரியாது என கூறி உள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!