பந்துவீச்சில் தாமதம் செய்ததற்காக அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு அபராதம்

#Australia #Test #Cricket #England
Prasu
2 years ago
பந்துவீச்சில் தாமதம் செய்ததற்காக அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு அபராதம்

ஆஷஸ் தொடரின் பா்மிங்ஹாம் டெஸ்ட்டில், பந்துவீச்சை தாமதம் செய்ததாக அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளில் தலா 2 குறைக்கப்பட்டன. 

மேலும் அவற்றின் வீரா்களுக்கான ஆட்ட ஊதியத்தில் 40 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கியமானதாக இருக்கும் ஆஷஸ் தொடா், கடந்த 16 ஆம் திகதி இங்கிலாந்தில் தொடங்கியது. 

பா்மிங்ஹாமில் நடைபெற்ற அந்த முதல் ஆட்டத்தில் அவுஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ‘த்ரில்’ வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தின்போது இரு அணிகளுமே தங்களது பௌலிங்கின்போது நிா்ணயிக்கப்பட்ட நேரத்தின் முடிவில் 2 ஓவா்கள் குறைவாக வீசியிருந்ததாக அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு 2 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளையும், ஆட்ட ஊதியத்தில் 40 சதவீதத்தையும் ஆட்ட நடுவரான ஆண்டி பைகிராஃப்ட் அபராதமாக விதித்தாா்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!