மதிய உணவின் போது இந்த விடயங்களை நாம் தவறவிடுகின்றோம்

#Health #Lanka4 #ஆரோக்கியம் #லங்கா4
Mugunthan Mugunthan
10 months ago
மதிய உணவின் போது இந்த விடயங்களை நாம் தவறவிடுகின்றோம்

நாம் மதிய உணவு எடுத்துக்கொள்ளும் போது விடும் சில தவறுகள் எதிர்பார்க்கதா அளவு பிரச்சினைக்கு தள்ளிவிடுகிறது. இன்றைய பதிவில் அந்த தவறுகள் என்ன என்பதைப்பார்க்கலாம்.

 நெருக்கடி மிக்க இந்த காலகட்டத்தில் சிலர் காலை உணவை தவிர்த்து நேரடியாக மதிய உணவை எடுத்துக்கொள்வது உடல் பருமன், சமிபாட்டு சிக்கல் போன்றவைக்கு வழிவகுக்கும்.

 மதிய உணவிற்கு பிற்பாடு அதிக நேரம் அமர்ந்திருப்பது அல்லது உடனே வேலைக்கு திரும்புவது இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு போன்ற காரணிகளுக்கு வழிவகுக்கும்.

 மதிய உணவின் போது நாம் போதுமான அளவு நீர் அருந்திக் கொள்வது அவசியம். நீரைத் தவிர்ப்பது மலச்சிக்கல், சமிபாட்டு சிக்கல் மற்றும் வயிற்றெரிச்சலுக்கு வழிவகுக்கும்.

 வேலைக்கு செல்வோர் சிலர் அவசரத்திற்காக வெளியே சிற்றுண்டிகளை காலையில் எடுப்பர் இத்தகையவர்கள் நேரத்திற்கு மதிய உணவை உட்கொள்ளல் அவசியம்.

 மதிய உணவின் போது தேநீர் கோப்பி போன்றவற்றை எடுத்தல் நெஞ்செரித்தல் அமிலத்தன்மை என்பவற்றை உண்டு பண்ணக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

 மதிய உணவானது ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்க நல்ல காய்கறி, மாமிசம் அல்லது ஊட்டச்சத்து மிக்க உணவாகவும் அதனை நன்கு மென்று சாப்பிடுவதும் அவசியம்.

 சிலர் மதியஉணவைத் தவிர்க்கும் பண்புடையவர்கள். இது இரத்த குளுக்கோஸின் அளவை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும்.