இங்கிலாந்தில் நண்பரால் குத்தி கொல்லப்பட்ட கேரள இளைஞன்
#Death
#Arrest
#Murder
#students
#England
Prasu
2 years ago

கேரள மாநிலம் பனம்பில்லி நகரை சேர்ந்தவர் அரவிந்த் சசிகுமார் (வயது 37). இவர் இங்கிலாந்தின் தென்கிழக்கு லண்டனில் உள்ள சவுத்தாம்படன் வே பகுதியில் தங்கி பணியாற்றி வந்தார்.
ஒரு குடியிருப்பில் அரவிந்த் சசிகுமார், 3 பேருடன் தங்கி இருந்தார். இந்த நிலையில் வீட்டில் அரவிந்த் சசிகுமார் உடலில் கத்திகுத்து காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அவரை உடன் தங்கியிருந்த கேரளாவை சேர்ந்த சல்மான் சலீம் (23) கத்தியால் குத்தி கொன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் அரவிந்தை சல்மான் சலீம் கொலை செய்துள்ளார். சமீபத்தில் லண்டனில், ஐதராபாத்தை சேர்ந்த இளம்பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



