கனடாவில் வாகன விபத்து: 15 பேர் உயிரிழப்பு

#Death #Canada #Accident
Mayoorikka
2 years ago
கனடாவில் வாகன விபத்து: 15 பேர் உயிரிழப்பு

கனடாவின் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

 மனிடோபா மாகாணத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் மேலும் 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 பாரவூர்தியும் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

 விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் 25 பேர் பயணித்துள்ளதாகவும், அவர்கள் அனைவரும் வயோதிபர்கள் எனவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

 அதிவேகமாக வாகனத்தை ஓட்டியதே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!